வேறொருவருடன் பழகியதால் ஆத்திரம்; காதலியை தாக்கிய காதலன் சிக்கினார்
திருச்சி உறையூரை சேர்ந்த 23 வயது வாலிபர், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் காதலி, வேறு ஒரு வாலிபருடனும் பழகி வந்தாக தெரிகிறது.
இது காதலனுக்கு தெரியவந்து, காதலியை வழிமறித்து, “என்னையும் காதலித்து விட்டு வேறு ஒருவரையும் காதலிக்கிறாயா? என்று தகராறு செய்தார். இதை தொடர்ந்து காதலியை அவர் தாக்கி உள்ளார். அருகில் இருந்த பொதுமக்கள் காயமடைந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து உறையூர் போலீசார், காதலனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.