500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் எம்.ஜி.ஆர்.நகர், மாரியம்மன் கோவில் அருகே எடமலைப்பட்டிபுதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் 10 மூட்டைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது.
போலீசார் மூட்டைகளை சோதனை செய்தபோது அதில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அதை பறிமுதல் செய்து அருகில் உள்ள அனாதை ஆசிரமத்தில் ஒப்படைத்தனர்.