ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் ஒழுகும் மழைநீர்; நோயாளிகள் கடும் அவதி
திருச்சி மாநகரின் இன்று பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் காற்றுடன் கூடிய மழை பெய்தது குறிப்பாக ஸ்ரீரங்கம் திருவானைகோவில் சத்திரம் பேருந்து நிலையம் தில்லைநகர் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது

இந்த நிலையில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை நோயாளிகள் வார்டில் மேற்கூரை பழுதடைந்து மழைநீர் உள்ளே புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தவர்களின் உடன் இருந்தவர்கள் புகுந்த மழைநீரை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் நோயாளிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.