ரெடிமேட் ஆடைகள், ஆன்லைன் வர்த்தகத்தால் தையற்கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

0 230
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 24  ரெடிமேட் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தால் வாழ்வாதாரம் இழந்து வரும் தையல் கலைஞர்கள். வாழ்வை மேம்படுத்த மாநில சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில சிறப்பு பொதுக் குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் சீத்தா மலை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தையல் கலைஞர்களின் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் பொது குழு உறுப்பினர்கள் 200க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தின் முடிவில் சங்கத்தின் கவுரவத் தலைவர், ஆறுமுகம் மற்றும் மாநிலத் தலைவர் சீதா மலை ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

அரசு தையல் கலைஞர்களுக்கு தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும், பள்ளிச் சீருடைகள் தைக்கும் பணியை ஒருவரிடமே மொத்தமாக வழங்காமல் தையல் கலைஞர்கள் அனைவரும் பயன்பெரும் வகையில் பிரித்துக் கொடுக்க வேண்டும்.

தையல் கலைஞர்கள் மூலம் ஒரு ஆண்டுக்கு மத்திய மாநில அரசுகளுக்கு ரூ. 75 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிறது. அதன் மூலம் தையல் கலைஞர்களுக்கு சலுகைகள் வேண்டும் என கேட்கிறோம். அரசு வழங்கும் வாரிய பலன்களை அதிகாரித்து தரவேண்டும். தமிழகத்தில் 20 லட்சம் தையல் கலைஞர்கள் உள்ளனர்.

ரெடிமேட் ஆடைகளின் தாக்கத்தால் தையல் கலைஞர்கள் போதிய வேலை இல்லாததால் வருமானமின்றி இருக்கின்றோம். எங்கள் வாழ்வு மேம்பாடு அடைய அரசு தையல் கலைஞர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வாழ்வாதாரம் மேம்பட உதவி புரிய வேண்டும். முன்பு கொடுக்கப்பட்டது போல் மீண்டும் தையல் கலைஞர்களுக்கு மின் கட்டண சலுகையை அரசு அளிக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தால் தையல் கலைஞர்கள் மிகுந்த பாதிப்படைவதை தடுக்க அரசு ஆன்லைன் வர்த்தகத்தை கட்டுப்படுத்த வேண்டும். என தெரிவித்தனர்.‌

Leave A Reply

Your email address will not be published.