கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்
திருச்சி சோமரசம்பேட்டை அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவக்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார் – அவரை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி சிவக்குமாரின் உறவினர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்று நாட்களாகியும் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சிவக்குமாரின் உடலை உறவினர்களின் வாங்கவில்லை.
கொலையாளிகளான தி.மு.க அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் கதிர்வேல் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர் ரவி முருகையா ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.