திருவரங்கத்தில் திறந்தவெளி கலையரங்கம் உருவாக்க கோரிக்கை

0 275
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி திருவரங்கத்தில் திறந்தவெளி கலையரங்கம் உருவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். கடந்த திங்கட்கிழமை அன்று முதல் முறையாக மாநகர மேயர் வணங்குவதற்குரிய திரு மு அன்பழகன் அவர்களை சந்தித்தோம். மனு கொடுத்தோம்.நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிலையம் தேவி டாக்கீஸ் பின்பறம்ஏற்படுத்தப்பட்டது. பொருத்தமின்மை காரணமாக இந்த பஸ் நிலையம் முழுமையான பயன்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை. பின்னர் இந்த பழய பஸ் நிலையம் பூ மார்கட்டாக மாற்றப்பட்டது.இந்த பூ மார்கட்டும் முழுமை அடையவே இல்லை. இன்னமும் மொத்த வணிக பூ மார்கெட் சாத்தார வீதியில்தான் நடைபெறுகிறது.நெரிசல் தினம்தோறும் பல வகையிலும்……. மொத்த வணிக பூ மார்க்கெட் இபிரோடு வாழைக்காய மண்டி வாழை இலை போன்ற காவிரி நீர் விவசாய உற்பத்தி விற்பனைகளை எல்லாம் திருவரங்கம் வடக்கு வாசல் கொள்ளிடம் தென்கரை ஓரமாக மாற்றி அமைக்கலாம்.தற்போது மிகவும் சிதம் அடைந்த பழைய பஸ் நிலைய பூ மார்க்கெட்டை ஓர் திறந்த வெளி கலையரங்கம் ஆக மாற்றலாம். நம்ம திருவரங்கத்தில் இந்த தேவி டாக்கீஸ் பகுதி ஓர் முக்கிய தொடர்பு மையமாகும். திருச்சிராப்பள்ளி நல அமைப்புகள் மாநகர வளர்ச்சி ஆர்வலர்கள் சார்பாக மாநகர மேயர் வணங்குதற்குரிய திரு மு அன்பழகன் அவர்களிடம் நான்கு பொது நலன் மனுக்களை முன் வைத்தோம். திருவரங்கத்தில் திறந்த வெளி கலையரங்கம் open air auditorium அமைக்கப்பட வேண்டி ஒரு மனு. மற்ற மனுக்கள் பற்றிய தகவலை தொடர்ந்து பதிவு செய்கிறோம். சிந்தாமணி சத்திரம் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் திட்டம் தொடர்பான கட்டுமானப் பணிகள் நடைபெறும்போது அருகில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் மடப்பள்ளி அன்னதான சமையல் கூடம் இடிந்து சிதைந்து விட்டது. இந்த மடப்பள்ளி அன்னதான சமையல் கூடம் மீண்டும் புத்துயிர் பெற வேண்டும். இதை சீர்ப்படுத்தும் கடமை பொறுப்பு மாநகராட்சிக்கு உள்ளது. இந்த கோரிக்கையை முன் வைத்து இருக்கிறோம். தற்போதைய திருச்சிராப்பள்ளி மத்திய பஸ் நிலையம் பொன்னகர் மிளகு பாறை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையை இணக்கும் இணைப்புச் சாலை முழுமை ஆக அகலப்படுத்தப்பட வேண்டும். மிளகுபாறை மெடிக்கல் காலேஜ் அருகே உள்ள நுழைவு வாயில் பகுதி மிகவும் குறுகலாக இருக்கிறது. மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள இ எஸ் ஐ மருத்துவமனை பகுதிக்குள் நகர்த்தப்பட வேண்டும். இந்த இடத்தில் உள்ள குறுகலாக உள்ள சாலைப்பகுதியை அகலமாக்கப்பட முடியும் என்று குறிப்பிட்டு இருக்கிறோம். திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் நிதி நிலைமை மேம்பட இலகுவான அணுகுமுறை முறைகளும் சில கண்டிப்பான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். மாநகராட்சிக்கு உரிய பெரும் நிலப் பகுதிகள் தொடங்கி சாலையோர சிறு பெட்டிக்கடைகள் வரையில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மாநகராட்சியின் சொத்துக்களை தனி நபர்கள் தங்களது கட்டுப்பாட்டில் அசைக்க முடியாத படி பயன்படுத்தி வருகிறார்கள். Third party dealing மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு சுமார் 500 முதல் 1000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.மாநகராட்சிக்கு வர வேண்டிய பெரும் தொகையை இவர்கள் பல காலமாக அள்ளிக் கொண்டு போகிறார்கள்.நிலையான சொத்துக்கள் பெரும் நில உடைமைகள் மூலம் பல நூறு கோடிகள் ரூபாய் வருவாய் நம்ம திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு கிடைத்திட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். நன்றி கண்ணன் என் ராமகிருஷ்ணன் திருச்சிராப்பள்ளி நல அமைப்புகள் மாநகர வளர்ச்சி ஆர்வலர்கள் சார்பாக ஒருங்கிணைப்பாளர் பொதுத் தொடர்பாளர். 93 857 52 367

Leave A Reply

Your email address will not be published.