சென்னை தூய தாமஸ் கல்லூரியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா

0 402
Stalin trichy visit

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் சென்னை கோயம்பேடு தூய தாமஸ் கல்லூரியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் முத்தமிழறிஞர் கலைஞர் பற்றிய நடனம் மற்றும் திராவிடம் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், பொன்முடி,மா.சுப்ரமணியன். சென்னை மாநகர மேயர் செல்வி.பிரியா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கலைக்காவிரி நடனக்குழு கல்லூரியின் செயலர் தந்தை அருள்பணி. லூயிஸ் பிரிட்டோ தலைமையில் பங்கேற்றனர்.நடனத்துறைப் பேராசிரியர்கள் முனைவர் G.J. லீமாரோஸ், முனைவர் அபர்ணா பிரீத்தா உள்ளிட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்வை தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அப்போன்ஸ் ஒருங்கிணைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.