தொட்டியம் அருகே 2 இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்து: நல்வாய்ப்பாக உயிர்தேசம் தவிர்ப்பு

0 314
Stalin trichy visit

திருச்சி, டிச.16 திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே இரு வேறு விபத்துகளில் கார்கள் விபத்துகளில் சிக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

தொட்டியம் அருகே கொசவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (35) .இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோணி மலையில் உறவினர் வீட்டில் நடைபெற்ற பூப்பு நீராட்டு விழாவிற்கு சென்று விட்டு மீண்டும் கொசவம்பட்டி திரும்பியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக காரை ஓட்டி வந்த பாலாஜியின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த நெல் வயலுக்குள் கார் புகுந்தது. இதில் காரில் பயணித்து வந்த குடும்பத்தினர் காயமின்றி நல்வாய்ப்பாக  உயிர் தப்பினர்.

இதேபோல் தொட்டியம் அருகே உள்ள சுள்ளி பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (45).நேற்று ஏலூர்பட்டி பகுதியில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்கு சுள்ளி பாளையத்திலிருந்து ஏழூர்பட்டிக்கு காரில் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த டூவீலர் மீது கார் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த கம்பி தடுப்பு வேலி மீது அந்தரத்தில் பாய்ந்து சென்று மோதி நின்றது. இதில் ராமசாமிக்கு பலத்தகாயம் ஏற்பட்டு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இரு வேறு விபத்துகளில் நல்வாய்ப்பாக உயிர் சேதம்  தவிர்க்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.