முசிறியில் லாரி மோதி முதியவர் பலி

0 239
Stalin trichy visit

திருச்சி, டிச.16 திருச்சி மாவட்டம், முசிறி – சேலம் புறநகர் சாலை அருகே மூக்கன் ஆசாரி தெருவில் வசித்து வந்தவர் ராமையா (80) . இவர் தனியாக வசித்துவந்தார். இந்நிலையில் இன்று காலை டீ குடிப்பதற்காக சாலையை கடந்துள்ளார். அப்போது கரூரில் இருந்து பெரம்பலூருக்கு டீசல் ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராமையா தலை நசுங்கி பலியானார். தகவல் அறிந்த முசிறி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரியை பறிமுதல் செய்து டிரைவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.