17 வயது சிறுமியை திருமணம் செய்தவர் கைது
திருச்சி, மே 30 திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்தவரை நேற்று போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் காவல் சரகத்திற்குட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் வேடசந்தூர் பகுதியில் உள்ள டெக்ஸ்டைல்ஸில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது வேலைக்காக அழைத்து செல்லும் வேன் டிரைவரான நடுப்பட்டி அண்ணாவி களத்தை சேர்ந்த தேக்கமலை மகன் ஹரி கிருஷ்ணன்(38), சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி சிறுமி காணவில்லை.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புத்தாநத்தம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரினைத் தொடர்ந்து சிறுமி தேடப்பட்டு வந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் ஹரிகிருஷ்ணனை விசாரணை மேற்கொண்ட நிலையில், சிறுமி அவருடன் இருந்தது தெரியவந்ததையடுத்து, சிறுமியை மீட்ட போலீஸார், ஹரிகிருஷ்ணனை கைது செய்தனர். ஹரிகிருஷ்ணன், சிறுமியை ஆசை வார்த்தைக்கூறி தன்னுடன் அழைத்து சென்று திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனைத்தொடர்ந்து குழந்தை திருமணம் மற்றும் போக்ஸோ பிரிவுகளின் கீழ் ஹரிகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்தனர்.