மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு ரோப்கார் – அமைச்சருக்கு எம்எல்ஏ நன்றி!
திருச்சி மாநகருக்கு பெருமை சேர்க்கும் விதமாக 275 அடி உயர மலைக்கோட்டையில் எழுந்தருளியுள்ள உச்சிப் பிள்ளையாரை பக்தர்கள் எளிதில் தரிசிக்க ரோப்கார் திட்ட பணிகள் விரைவில் தொடங்க வேண்டுமென முதல் சட்டமன்ற கூட்டத்தில் இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ கோரிக்கை வைத்தார். இதையடுத்து முதற்கட்டமாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கடந்த ஜூன் மாதம் மலைக்கோட்டை கோயிலில் நேரடியாக ஆய்வு செய்ததுடன் விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக ரோப்கார் அமைக்கும் இடத்தை தேர்வு செய்ய வல்லுனர் குழுவினை அனுப்பி வைத்ததற்காக அமைச்சர் சேகர்பாபுவை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து தொகுதி மக்களின் சார்பாக இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo