மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!
திருச்சி மாநகர் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் திருச்சி அண்ணாசிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ராயல் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முரளி முன்னிலை வகித்தார். இதில் மாநில தலைமை நிலைய செயலாளர் கனல்கண்ணன், மாநில துணை கொள்கை பரப்பு செயலாளர் திருப்பூர் சுடலை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo