கால்நடை மருத்துவ முகாம்
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள ஆங்கியம் மற்றும் எஸ்.என்.புதூரில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருச்சி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் எஸ்தர் ஷீலா உத்தரவின் பேரில், முசிறி கோட்ட உதவிஇயக்குனர் சையது முஸ்தபா தலைமையில், எரகுடி கால்நடை மருந்தக மருத்துவர் ஆனந்த், கால்நடை ஆய்வாளர்கள் கோபி, சுந்தர்ராஜூ, செந்தில்செல்வி ஆகியோர் முகாமில் சிகிச்சையளித்தனர்.
இதில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல் ஆண்மை நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், மலடு நீக்க சிகிச்சை செய்தல், சினை பரிசோதனை செய்தல், சிறு அறுவை சிகிச்சைகள், தாது உப்பு கலவை வழங்குதல், சிறு கால்நடை விழிப்புணர்வு கண்காட்சி ஆகியன மேற்கொள்ளப்பட்டன. இதில் சுற்றுப்பகுதியை சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர்.