ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற மாவட்ட ஆட்சியர்

0 263
Stalin trichy visit

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நடைபெறும் சத்குரு ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின்
176-வது ஆராதனை நிறைவு விழாவில் நிகழ்ச்சிகளை தமிழக ஆளுநர்ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார். இதற்காக நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் மாலை திருச்சி வந்து சேர்ந்தார்.

விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மத்திய
மண்டல ஐ.ஜி கார்த்திகேயன், மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா, பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து காரில் தஞ்சைக்கு புறப்பட்டு சென்ற ஆளுநர் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி இன்று காலை நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார் மீண்டும் விழாவை முடித்துவிட்டு திருச்சி விமான நிலையத்திற்கு இன்று மாலை வர உள்ளார் நிலையில் திருச்சி மாநகர் முழுவதும் பாதுகாப்பு கருதி 17 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று திருச்சிக்கு வருகை தந்த ஆளுநர் திருவெறும்பூர்  வழியாக தஞ்சைக்கு செல்வதற்கான பாதுகாப்பு பணிகள் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில், ஆளுநரின் பாதுகாப்பு கருதி மாத்தூர், சூரியூர் வழியாக தஞ்சாவூர் வழியாக சென்றார்.

Leave A Reply

Your email address will not be published.