சென்னையில் விற்பனை கண்காட்சி; சுயஉதவிக்குழுவினர் பயன்பெறலாம்!

0 405
Stalin trichy visit

சென்னையில் உள்ள தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் கோடை கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநில அளவிலான சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை கண்காட்சி ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாவட்டத்திலிருந்து

இக்கண்காட்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களின் உற்பத்திப் பொருட்கள், குழு தொடர்பான முழு விவரங்களுடன் கலெக்டர் அலுவலகத்திலுள்ள மகளிர் திட்ட அலுவலகத்தை நேரில் வந்து விற்பனை கண்காட்சியில் கலந்து கொள்வதற்கான உரிய அனுமதியை பெறலாம். கண்காட்சியில், தாங்கள் உற்பத்திப் பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்து பயனடையலாம். கூடுதல் விவரங்களுக்கு 0431 2412726 என்ற எண்ணில்தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.