சமயபுரம் மாரியம்மன் முத்துப்பல்லக்கில் வீதிஉலா!

0 263
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேரோட்ட விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்திரைத் தேர்த் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான சித்திரைத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான 10ம் நாள் சித்திரை தேரோட்ட விழா

கடந்த 19ந் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் லட்டகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் விழாவின் 12ம் நாள் வசந்த மண்டபத்தில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடைப்பெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகி கோயில் உள்பிரகாரம் மற்றும் தேரோடும் வீதிகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் கோயில் பணியாளர்கள் கோயில் குருக்கள் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.