காற்று ஒலிப்பான்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்த போக்குவரத்து ஆய்வாளர்!
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பேருந்து உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மோட்டார் விதிகளுக்கு மாறாக அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பொறுத்தப்பட்டிருப்பதாக மணப்பாறை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார் வந்தது. இதையடுத்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சத்யா மற்றும் போக்குவரத்துறை காவலர்கள்

மணப்பாறை பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் படி காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையில் அந்த பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர். மேலும் மோட்டார் வாகன விதிகளுக்கு புறம்பாக அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை தாங்களாகவே அகற்றிக் கொள்ளும்படி எச்சரித்தனர்.