சந்திர கிரகணத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோயில் நடை அடைப்பு
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று நடைபெறும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதியம் 12:30 மணி முதல் இரவு 7:30 வரை கோயில் நடை அடைக்கப்படுகிறது.
பூமியின் நிழலில் நிலவு கடந்து செல்லும்போது அது சூரியனின் நேரடியான ஒளியை பெற இயலாமல் போய்விடுகிறது. இதனால் நிலவு ஒளி குன்றுவதையே சந்திர கிரகணம் என்கிறோம். சந்திர கிரகணத்தின் போது சூரியன் எதிர் திசையில் நிலவு வருவதால் சந்திர கிரகணம் பௌர்ணமியின் போது தான் தெரியும். நிலவு முழுமையாக பூமியின் முழு நிழல் பகுதியில் மறைவது முழு சந்திர கிரகணம் ஆகும்.

click the image to chat on whatsapp
இந்நிலையில் சந்திர கிரகணம் இன்று 2 39 மணி முதல் மாலை 6:19 மணி வரை நடைபெறுகிறது. பொதுவாக கிரகண காலத்தில் கோயில்களில் நடை அடைக்கப்படுவது வழக்கம். அதன்படி சமயபுரம் மாரியம்மன் கோவில் காலை வழக்கம் போல் 5:30 மணிக்கு நடை திறக்கப்படும்
