எம்பவர் டிரஸ்ட் சார்பாக திருச்சியில் மரக்கன்றுகள் நடும் விழா!

0 472
Stalin trichy visit

எம்பவர் டிரஸ்ட் சார்பாக திருச்சி‌ ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் கிரண் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் வேம்பு, புங்கை, பூவரசு, இலுப்பை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

மேலும் இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சைமன் குமார், உதவி வனப்பாதுகாவலர் சம்பத் குமார், வனச்சரக அலுவலர் குணசேகரன், ஈர நில ஆராய்ச்சி மேற் பார்வையாளர் மாரியப்பன், சுற்றுச்சூழல் உதவி ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா, எம்பவர் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் கனிமொழி மற்றும் ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

 

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய….https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8

 

Leave A Reply

Your email address will not be published.