திருச்சி அரசு கல்லூரி பணியாளருக்கு கொரோனா – ஆசிரியர்கள் ஊழியர்கள் இரண்டு நாள் வர தடை!
திருச்சி மாவட்டம் முசிறி அரசு கல்லூரி முதல்வர் சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு… முசிறி அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் பணிபுரியும் பெண் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் இன்றும் (27/08/2021) நாளையும் (28/08/2021) ஆகிய இரண்டு நாட்கள் கல்லூரிக்கு வருகை தர வேண்டாம்.
முதலாமாண்டு மாணவ மாணவியர் சேர்க்கை குழுவின் தீர்மானத்தின்படி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து துறை சார்ந்த ஆசிரியர்கள் துறைத் தலைவரிடம் தகவல்களை பெற்று மாணவ மாணவிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறியhttps://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy