பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
திரு
திருச்சி, ஜன.28திருச்சிராப்பள்ளி மாவட்ட பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் புவனேஸ்வரி, பிரபு ஆகியோர் தலைமை தாங்கி பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் நோக்கம் குறித்து தலைமை உரை ஆற்றினார்கள். மாநில பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் திருமுருகன், இதயராஜா, மண்டல ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமாரி ஆகியோர் பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் செயல்படும் ஐந்து வகையான நிலை குழுக்களான அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குழு, வளர் இளம் பருவக் குழு, பள்ளி மேலாண்மை குழு,இல்லம் தேடி கல்விக்குழு, வாசிப்பு இயக்க குழு ஆகிய நிலை குழுக்கள், பள்ளியளவில்,சமுதாய அளவில் வாசிப்பு இயக்கத்தை கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்து பேசினார்கள். சிறப்பு விருந்தினராக அந்த நல்லூர் வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் கலந்துகொண்டு கல்வியின் அவசியம் பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகிகள் சமுதாயத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
திருச்சி நகர வட்டார ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். அந்தநல்லூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் பெல்சிட்டாமேரி நன்றி கூறினார்.மாவட்டம் முழுவதும் உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.