பள்ளி மாணவன் மாயம் :காவல் நிலையத்தில் புகார்

0 385
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வயல் திருப்பஞ்சீலியைச் சேர்ந்த 9 ம் வகுப்பு பள்ளி மாணவன் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. திடீரென மாயமானார். காவல் நிலையத்தில் புகார். தேடும் பணிகள் தீவிரம்.

மண்ணச்சநல்லூர் அருகே கிளியநல்லூர் வயல் திருப்பஞ்சீலி அர்ஜுன தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் 14 வயதான யோகேஷ். இவர் திருவாசியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறை நாளான சனிக்கிழமை காலை 6 45 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் நண்பர்கள்,உறவினர்கள் வீடுகளில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து மாணவனின் தந்தை மணி வாத்தலை காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் மாயமான பள்ளி மாணவனை தீவிரமாக தேடி வருகின்றனர். மாணவன் குறித்து தகவல் தெரிந்தால் வாத்தலை காவல் நிலைய தொலைபேசி எண் 94981 00681 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என போலீசார் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.