லால்குடி, கல்லக்குடி போலீஸ் நிலையங்களில் எஸ்பி மூர்த்தி திடீர் ஆய்வு
திருச்சி மாவட்டம் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஸ்பி மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது போக்சோ சட்டத்தில் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு விபரங்கள், சிஎஸ்ஆர் எனப்படும் சமுதாய பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
இதையடுத்து கல்லக்குடி காவல் நிலையம் சென்ற எஸ்பி மூர்த்தி, அங்கு பதிவு செய்த குற்ற வழக்குகள், சிவில் வழக்குகள் உள்ளிட்ட கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது லால்குடி டிஎஸ்பி சீதாராமன், லால்குடி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் (பொறுப்பு) உடனிருந்தனர்.
கடந்த ஜூலை மாதம் லால்குடி போலீஸ் நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்ட எஸ்பி மூர்த்தி, பணியில் அலட்சியமாக இருந்த எஸ்ஐ உட்பட 16 காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்திரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.