31ம் தேதிக்குள் அரசு மணல் குவாரிகளை இயக்க நடவடிக்கை!

0 410
Stalin trichy visit

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு தலைவர் ராசாமணி திருச்சி புதுகை சாலையில் உள்ள கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்ட மண்டல தலைமை அலுவலகத்தில் செயற்பொறியாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன் தமிழகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் மணல் குவாரிகள் இயக்கப்பட்டு

வந்தது. இதனைநம்பி 55 ஆயிரம் லாரிகள் மற்றும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இருந்தனர். தொடர்ந்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மணல் விற்பனை இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டு அரசேவிற்கும் என அறிவித்தார். தமிழகத்தில் கட்டுமான பணிக்கு தினசரி 60 ஆயிரம் யூனிட் மணல் தேவைப்படுகிறது. இதில் 5 முதல் 6 அரசு மணல் குவாரிகள் மூலம் 2,500 யூனிட் மணல் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு எம்.சாண்ட் மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த

எம்.சாண்ட் மணல் தரமற்ற கல்லை அரைத்து விற்பனை செய்வதால் கட்டடத்தில் உறுதி தன்மை பாதிக்கப்பட்டு இடிந்து விழுவதால் உயிர் பலி ஏற்பட்டு வருகிறது. இந்நிலை யில் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சரியான மணல் லோடு இல்லாததால் மணல் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில்

வாங்கிய கடனையும் கட்டமுடிய வில்லை. மேலும், தமிழகம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மணல் குவா ரிகளை இயக்குவதற்கு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தும் இதுவரை இயக்கப்படாமல் உள்ளது. எனவே தமிழக அரசு பரிசீலினை செய்து மணல் குவாரிகளை திறந்து 10 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் குடும்பத்தினை காப்பாற்ற இந்த மாதம் 31ம் தேதிக்குள் அரசு மணல் குவாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.