பைக்கில் இருந்து தவறி விழுந்து உடற்கல்வி ஆசிரியர் பலி

0 374
Stalin trichy visit

திருச்சி, ஜன.30 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உளுந்தங்குடி திருச்சி துறையூர் புறவழிச்சாலையில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த உடற்கல்வி ஆசிரியர் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மண்ணச்சநல்லூர் பண்டாரிநாதன் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் பாலகிருஷ்ணன்(44) . இவர் திருப்பைஞ்சீலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 28 ந்தேதி இரவு தனது மோட்டார் பைக்கில் திருச்சி துறையூர் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது உளுந்தங்குடி புள்ளம்பாடி வாய்க்கால் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதமாக மோட்டாரில் பைக்கிலிருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு் மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.