திடக்கழிவு மேலாண்மை குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி!

0 413
Stalin trichy visit

மத்திய சூழலியல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் வல்லுனர்களை கொண்டு ஊரகப்பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பெண்களுக்கு பயிற்சியளிக்கப்பட உள்ளது. அதன்படி இந்தியாவிலேயே முதன்முறையாக திடக்கழிவு மேலாண்மை குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வையம்பட்டியில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது. 50 நாட்கள்

நடைபெறும் இப்பயிற்சியில் உயிரிமருத்துவக் கழிவு, நெகழிக் கழிவு, கட்டிடக் கழிவு மற்றும் மின்னணுக் கழிவு ஆகியவற்றை கையாளுவதற்கான நவீன தொழில்நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஊரக மக்களின் நிலையான வாழ்வியல் மேம்பாட்டிற்காக பனியாற்றி வரும் ஃபார்ம் இந்தியா மற்றும் சூர்யா நினைவு அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த முன்னோடி முயற்சியினை தொடங்கிவைத்து இயற்கை ஆர்வலர் ஜெயகரன் பேசினார். விழாவில் வையம்பட்டி ஊராட்சி மன்றத்

தலைவர் சுப்பிரமணியன், கல்லூரி முதல்வர், பயிற்றுனர்கள், மாணவிகள் என பலரும் கலந்து கொணடனர். 50 நாட்கள் நடைபெறும் பயிற்சியின் நிறைவில் கழிவு மேலாண்மையில் திறன்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை கற்றுத்தேர்ந்த மாணவிகள் மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், வேளாண் பண்ணைகள், உள்ளாட்சி அமைப்புகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிவாய்ப்புப் பெற்று கழிவு மேலாண்மையில் புதுமைகள் செய்து படிப்படியாக சூழலியல் பாதுகாப்பிற்கு வித்திடுவார்கள் என பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.