குடிபோதையில் தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மகன் கைது!
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 56). கூலி தொழிலாளி, இவரது மகன் சரவணகுமார்(வயது 28). கூலி தொழிலாளி இந்த நிலையில் சுப்பிரமணி நேற்று முன்தினம் வீட்டில் இருந்துள்ளார். அப்போது குடிபோதையில் சரவணகுமார் வீட்டிற்கு வந்துள்ளார். அதனை சுப்பிரமணி கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சரவணகுமார் இரும்பு பைப்பால் சுப்ரமணியை தாக்கி உள்ளார். இதில் சுப்ரமணியனின் தலை, நெஞ்சு, வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டத்தை தொடர்ந்து,
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சுப்பிரமணி சிகிச்சைக்கு பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே திருவெறும்பூர் போலீசாரிடம் இச்சம்பவம் குறித்து சுப்ரமணியன் மூத்த மகன் சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில், திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிந்து சரவணகுமாரை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தனர். இந்த நிலையில் தற்போது சரவணகுமார் மீது திருவெறும்பூர் போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து உள்ளனர்.