சமயபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
திருச்சி, பிப்.13 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேவெங்கங்குடியில்வழிநடை உபயம் கண்டருளிய சமயபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூசத்திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தைப்பூசத்திற்காக கண் ணாடி பல்லக்கில் அம்மன் புறப்பட்டு வடக்காவிரிக்கு சென்ற டைந்தார். நள்ளிரவில் அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற் றது. இதைத்தொடர்ந்து நேற்று மண்ணச்சநல்லூர் வழியாக வழிநடை உபயம் கண்டருளிய அம்மனுக்கு வெங்கங்குடி வி. எஸ்.பி. கார்டனில் 50-ம் ஆண்டாக சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்ம னுக்கு தேங்காய் உடைத்தும், தீபம் ஏற்றியும் வழிபட்டனர். தொடர்ந்து விழாகுழு சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், சமயபுரம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், கோவில் இணை ஆணையர் பிரகாஷ், மண்ணச்சநல்லூர் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சீதாஇளங்கோவன், திருச்சி மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி அமைப்பாளர் ராஜேஷ்கண்ணா, ஸ்ரீராம் பில்டர்ஸ் உரிமையாளர் பொறியாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அம் மன் ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைந்தார். அங்கு அம்ம னுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரம் முன்பு அம்மன் எழுந்தருளிய பிறகு கொடி இறக்கப்பட்டது. இரவு 12 மணிக்கு கேடயத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை அறங் காவலர் குழுத்தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன் தலைமையில், கோவில் இணை ஆணையர் பிரகாஷ் மற்றும் அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.