சிறப்பு தூர்வாரும் பணி: நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் ஆய்வு

0 386
Stalin trichy visit

திருச்சி, மே 31 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் சோழமாதேவி உய்யக்கொண்டான் எல்லக்குடி, குவளைவாய்க்கால் வாய்கால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்னோ இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், நீர்வளத்துறை மண்டல தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, நடுக்காவிரி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறாயாளர் சுப்ரமணியன், செயற்பொறியாளர் தமிழ்ச்செவ்ன, உதவி செயற்பொறியாளர் தினேஷ்கண்ணன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.