திருவெறும்பூரில் ரமலானை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

0 262
Stalin trichy visit

திருச்சி திருவெறும்பூரில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு குழந்தைகள், பெரியவர்கள் என புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர். நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் குர்ஆன் உலகிற்கு இறைவனால் வழங்கப்பட்டதும் இந்த மாதம் என்பதால், இந்த மாதம்

முழுவதும் நோன்பு இருந்து ரமலான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர். புனித ரமலான் தினமான இன்று திருச்சி திருவெறும்பூரில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. தொழுகையில் குழந்தைகள், பெரியவர்கள் பலர் கலந்து கொண்டனர். புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.