ஹோலிகிராஸ் கல்லூரி வணிக நிருவாகத்துறை சார்பில் சிறப்பு கருத்தரங்கம்
திருச்சி புனித சிலுவைக் கல்லூரியின் வணிக நிருவாகத்துறை சார்பில் நடைபெற்ற மன்ற விழாவில் கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப்பேராசிரியர் கி.சதீஷ் குமார் கலந்துகொண்டு “தமிழரின் வணிக அறம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். துறைத் தலைவர் முனைவர் சுரேகா பெலிக்ஸ் பேரா.நஜ்மா உள்ளிட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

தமிழரின் வணிக அறம் என்ற தலைப்பில் பேரா.கி சதீஷ் குமார் தனது சிறப்புரையில் தமிழரின் வணிக அறம் தனித்துவமானது கடல் கடந்து வணிகம் மேற்கொண்டதில் தமிழினம்தான் முன்னோடி. அழகன்குளம் அகழாய்வில் கப்பல் கட்டுமானம் படம் பொறித்த சின்னம் பனை ஓடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைவுபடாது கொடுத்தனர். இயற்கைக்கும் உயிர்களுக்கும் பாதகமின்றி செய்வதே தமிழரின் வணிக அறம். அன்பு ஈனும் அறம் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் என்ற கோட்பாடு தமிழருடையது. அறமற்ற பன்னாட்டு வணிகமயத்தால் வளரும் நாடுகளின் வளங்கள் சூறையாடப்படுகிறது. சுரண்டப் படுகிறது. அதனால் காலநிலை மாற்றம் ஏற்படுகிறது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் தமிழர் அறம். எவ்வுயிரையும் தம்முயிர் போல் எண்ணுவதே தமிழர் வணிக அறம். ஐந்திணைகளையும் முதலீடு என்ற பெயரில் சுரண் டாமல் எதிர்காலத் தலைமுறைக்கும் சேர்த்தே பொருளீட்டி பொருள்பட வாழ்வதே தமிழர் வணக அறம். என்றார்.
பி.பி.ஏ மூன்றாமாண்டு மாணவர் கலந்துகொண்டனர்.