ஸ்ரீரங்கம் கோவில் அன்னதான கூடத்துக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கிய சென்னை பக்தர்
சென்னையை சேர்ந்த பக்தர் எஸ் .ஜெகநாதன் – திருமதி உஷா ஜெகநாதன் தம்பதியினர் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அன்னதான கூடத்திற்கு ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை உபயமாக கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்துவிடம் இன்று (05.11.2022) வழங்கினார்கள் , முன்னதாக அர்ச்சகர் சுந்தர்பட்டர் சிறப்பு பூஜை செய்தார் .
