திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் உணவு வணிகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு 4வது சிறப்பு தடுப்பூசி முகாம் மற்றும் பதிவு உரிமம் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் 311 உணவு வணிகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி போடும் நிகழ்வு 17 உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு துறையில் பதிவு உரிமம் வழங்கப்பட்டது.

முகாமினை டாக்டர் ரமேஷ் பாபு தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ், அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் காமராஜ், அனைத்து வியாபாரிகள் சங்க பொருளாளர் சுப்பிரமணி, அனைத்து வியாபாரிகள் சங்க கவுரவத் தலைவர் ஆதித்தன், அனைத்து வியாபாரிகள் சங்க செய்தி தொடர்பாளர் சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.