
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவுப்படி இன்று நடைபெற்றது. திருச்சி நீதிமன்றங்களில் ஐந்து அமர்வுகளிலும், லால்குடி, மணப்பாறை, துறையூர், முசிறி, ஸ்ரீரங்கம் ஆகிய நீதிமன்றங்கள் தலா ஒரு மக்கள் நீதிமன்றம் அமர்வுகளிலும் என மொத்தம் 10 அமர்வுகளில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சமரச தீர்வு காணப்படும் வழக்குகள் மட்டும் எடுத்துக் கொள்ளப்படும். நிலுவையில் உள்ள உரிமையையில் வழக்குகள் சமரசம் செய்ய கூடிய குற்றவியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு கோரிய வழக்குகள், தொழிலாளர் நல தீர்ப்பாயத்தில் நஷ்ட ஈடு கோரிய வழக்குகள், அரசு நில ஆர்ஜித சம்பந்தப்பட்ட இழப்பீடு, காசோலை மோசடி வங்கியில் கடன் வகைகள் மற்றும் காசோலை மோசடி ஆகிய வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காணப்படும்.


click the image to chat on whatsapp
மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி (பொறுப்பு) தலைமையில் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் நீதிமன்றத்தி 13 ஆயிரத்து 265 நிலுவையில் உள்ள வழக்குகள் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy