திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே உள்ள கொத்தட்டை குறிஞ்சி காலனியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். இவரது மூன்றாவது மகன் சூர்யா (வயது 15). சோமரசம்பேட்டை அரசு
பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கிளி பிடிப்பதற்காக வயலூர் அருகே உள்ள ஒரு தென்னை மரத்தில் ஏறி உள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் அங்கு சென்ற சோமரசம்பேட்டை உதவி
ஆய்வாளர் கார்த்திக் பிரேதத்தை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.