ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி விழா பகல்பத்து 6ம் திருநாள்
திருச்சி : ஸ்ரீரங்கம் பகல் பத்து (திருமொழி) திருநாள் 6ம் நாள் :
சிகப்பு சிக்கு தாடையுடன் வரதன் கலிங்கத்துராய் அலங்காரம்
நம்பெருமாள் இன்று சிகப்பு சிக்குத் தாடையில் வரதன் கலிங்கத்துராய்,சூரிய சந்திர வில்லைகள், ஓட்டியாண காப்பு சாற்றி, பங்குனி உத்திர பதக்கம், வைஜயந்தி பதக்கம், அடுக்கு பதக்கங்கள், அரைச் சலங்கை, மகர கர்ண பத்ரம், வைர அபயஹஸ்தத்துடன், வெண்பட்டு வஸ்திரம், 2 வட பெரிய முத்து சரம் சாற்றி, நெல்லிக்காய் பொட்டு மாலை, தங்கப்பூண் பவள மாலை அணிந்து சேவை.