திருச்சி மாவட்டம், வையம்பட்டி போலீஸ் நிலையம் முன்பு திடீரென பெண் ஒருவர் உடலில் மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த போலீசார் உடனே தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் ஆனாங்கரைப்பட்டியை சேர்ந்த சுமதி(45) என்பதும் உள்ளூர் பிரச்சனை தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் இதுபோன்று ஈடுப்பட்டதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.