திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையில் அதிநவீன நியூரோநேவிகேஷன் சிஸ்டம் அறிமுகம்

0 47
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 17  திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையில் அதிநவீன நியூரோநேவிகேஷன் சிஸ்டம் அறிமுகம் செய்துள்ளது.

திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை அதிநவீன நியூரோநேவிகேஷன் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது; திருச்சிமற்றும் டெல்டா பகுதிகளில் முதல்முறையாக மேம்பட்ட ஸ்ட்ரோக் கமாண்ட்சென்டரும் தொடக்கம் திருச்சி நரம்பியல் மற்றும் மூளை அறுவை சிகிச்சை துறையில் புதிய மைல்கல்லை எட்டும் வகையில்,

திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை, திருச்சிமற்றும் டெல்டா பகுதிகளில் முதல் முறையாக அதிநவீன நியூரோநேவிகேஷன் சிஸ்டம் (Neuro Navigation System) மற்றும் மேம்பட்ட சி.டி. பெர்ஃப்யூஷன் (CTPerfusion) தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்ட்ரோக் கமாண்ட் சென்டரை (Stroke Command Centre) அறிமுகப்படுத்தியுள்ளது.

நியூரோநேவிகேஷன்சிஸ்டம் – மூளை அறுவை சிகிச்சையில்புதிய புரட்சி நியூரோநேவிகேஷன் சிஸ்டம் என்பது மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சைகளில் மிகத் துல்லியமான வழிகாட்டுதலை வழங்கும் நவீன Image Guided Surgery தொழில்நுட்பமாகும். ஜி.பி.எஸ். (GPS) போன்று செயல்படும் இந்த அமைப்பு, நோயாளியின்அறுவை சிகிச்சைக்கு முன்பு எடுக்கப்பட்டCTமற்றும் MRI ஸ்கேன் படங்களை, அறுவை சிகிச்சையின்போது நோயாளியின் உண்மையான மூளை மற்றும் தண்டுவடஅமைப்புடன் ஒருங்கிணைத்து, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு மிகத் துல்லியமான வழிகாட்டுதலை வழங்குகிறது.

இந்த தொழில்நுட்பத்தின் முக்கிய நன்மைகள்: மூளைக் கட்டிகளை மிகுந்த துல்லியத்துடன் கண்டறிந்து பாதுகாப்பாக அகற்றுதல். மூளையின் முக்கிய செயல்பாட்டுபகுதிகளை பாதுகாத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளுதல் சிக்கலானமூளை, மண்டையோட்டு (Skull Base) மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சைகளை அதிக பாதுகாப்புடன் மேற்கொள்ளுதல் அறுவை சிகிச்சைக்கான சரியான பாதை கோணம் மற்றும் ஆழத்தை துல்லியமாக கணித்தல். ஆரோக்கியமானதிசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைத்து, நோயாளி விரைவில் குணமடைய உதவுதல். அப்பல்லோ திருச்சிநரம்பியல் சிறப்பு மருத்துவக் குழு இந்த மேம்பட்ட நரம்பியல் சேவைகளை வழங்கும் மருத்துவக் குழுவில் டாக்டர் எஸ். ஃபசல் இலாஹி (இன்டர்வென்ஷனல் நியூராலஜிஸ்ட்), டாக்டர் சையத் அலி எஸ். (நியூரோசர்ஜன்), டாக்டர் மயிலன் சின்னப்பன் (நியூரோசர்ஜன்), மற்றும் டாக்டர் செந்தில் குமார் எஸ். (நியூரோ சர்ஜன்) ஆகியோர்இடம்பெற்றுள்ளனர்.

அறிமுக நிகழ்ச்சி இந்த நவீன மருத்துவ வசதிகளின் அறிமுக நிகழ்ச்சியில், திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை,மெடிக்கல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்ரீவித்யா, வரவேற்புரை வழங்கினார். அப்பல்லோ சிறப்பு. மருத்துவமனை, தலைவர் மற்றும் அசோசியேட் துணைத் தலைவர், ஜெயராமன் இந்த அதிநவீன நியூரோநேவிகேஷன்சிஸ்டம் மற்றும் ஸ்ட்ரோக் கமாண்ட் சென்டரை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

இந்த அறிமுகத்தின் மூலம், திருச்சி மற்றும் டெல்டா பகுதிகளில் உலகத் தரத்திலான நரம்பியல் மற்றும் பக்கவாத சிகிச்சைகளை, மக்களின் சொந்த ஊரிலேயே அதிநவீன தொழில்நுட்பங்களுடன் வழங்கும் புதிய அத்தியாயத்தை அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை தொடங்கியுள்ளது. நியூரோ நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் மேம்பட்ட ஸ்ட்ரோக் கமாண்ட் சென்டர் ஆகியவை, திருச்சிமற்றும் டெல்டா பகுதிகளில் நரம்பியல் சிகிச்சைக்கான புதிய தரநிலையை உருவாக்கும்முக்கிய முன்னேற்றமாக அமையும்.

Leave A Reply

Your email address will not be published.