நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக்கில் திடீர் தீ!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள படுகைக்களம் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 27). நேற்று இரவு சிங்கப்பூர் செல்வதற்காக தனது எலக்ட்ரிக் பைக்கில் மணப்பாறைக்கு வந்த இவர் ஆஞ்சநேயர் பகுதியில் உள்ள தனது நண்பர் பாலு என்பவரது கடையில் பைக்கை நிறுத்தி விட்டு சென்று விட்டார். இன்று காலை பாலு கடையினுள் இருந்து எலக்ட்ரிக் பைக்கை எடுத்து

வெளியே வைத்தபோது பைக்கின் பேட்டரி பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியது. பின்னர் தண்ணீரை உற்றி அணைக்க முயற்சித்தனர். இருப்பினும் சிறிது நேரத்தில் அதிகளவில் புகைவெளியேறியது. பேட்டரி பகுதிகள் முற்றிலும் சேதமடைந்தது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.