வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை; பாரதிய மஸ்தூர் சங்கம் அறிவிப்பு!
இன்றும்(28ம் தேதி), நாளையும் (29ம் தேதி) நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு மத்திய தொழிற் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலை நிறுத்தத்தில் தேச நலன், தொழிலாளர் நலன், தொழில் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு வரும் பாரதிய மஸ்தூர் சங்கம் பங்கேற்காது. வேலை நிறுத்தம் அறிவித்துள்ள தொழிற்சங்கங்கள் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே வேலை நிறுத்த
போராட்டத்தை அறிவித்துள்ளதே தவிர, தொழிலாளர் நலனில் அக்கறை கொள்ளவில்லை என்று பாரதிய மஸ்தூர் சங்கம் கருதுகிறது. திருச்சி மாவட்டத்தில் வழக்கம்போல் பணிக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். இத்தகவலை பாரதிய மஸ்தூர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.