பஞ்சமுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

0 397
Stalin trichy visit

திருச்சி, ஆக.9 திருச்சி மாவட்டம்,  தா.பேட்டையில் காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் பஞ்சமுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் நடந்தது. அப்போது பஞ்சமுக பைரவருக்கு சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தது. அதனை தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமுக பைரவர் பக்தர்களுக்கு அருளினார். இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.