முசிறியில் குறு வட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள்
திருச்சி மாவட்டம், முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குறுவட்ட அளவிலான ஆண்கள் பெண்கள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று கேரம் ஒற்றையர் மற்றும் இரட்டையர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் தீபா துவக்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் வாணிஸ்ரீ, முதுகலை ஆசிரியர் புஷ்பராஜ் முன்னிலை வகித்தனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகள்14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர்
பிரிவுகளில் நடைபெற்றது. போட்டிகளுக்கு நடுவர்களாக ராஜகோபால், தமிழ்ச்செல்வன், பெரியசாமி, செல்வராணி, சோபனா ,சுரேஷ், சதீஷ்குமார்மற்றும் மருதுபாண்டி ஆகியோர் செயல்பட்டனர். போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 14 மற்றும் 17 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முசிறி அணியினரும் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் அரசு மேல்நிலைப்பள்ளி புலிவலம் அணியினரும், பெண்கள் பிரிவில் 14 மற்றும் 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் அமலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணியினரும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முசிறி அணியினரும் வெற்றி பெற்றனர். இதே போல் . இரட்டையர் ஆண்கள் பிரிவில் 14 மற்றும் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முசிறி அணியினரும் , 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் அரசு மேல்நிலைப்பள்ளி புலிவலம் அணியினரும் , பெண்கள் பிரிவில் 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணியினரும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணி வீரர் வீராங்கனைகளை விளையாட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பாராட்டினர். போட்டிக்கான ஏற்பாடுகளை முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு ஆசிரியர் ஆனந்தி செய்திருந்தார்.