பயணியர் நிழற்குடை, மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை மக்களுக்கு அர்ப்பணித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்!

0 387
Stalin trichy visit

மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் K.S.M.கருணாநிதி உறுப்பினர் நிதியில் இருந்து, பத்தாளப்பேட்டையில் செட்டியார் பேட்டை, கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் எழில்நகர் ஆகிய இரண்டு இடங்களிலும் தலா ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை திறப்பு விழாவும், அதனைத் தொடர்ந்து மக்களின் பயன்பாட்டிற்காக ஒன்றிய கவுன்சிலர் ஆ.மகாதேவன் உறுப்பினர் நிதியில் இருந்து கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை மேலகலமலை, குவளக்குடி பகுதியில் 9.83 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை மக்களின் பயன்பாட்டிற்கு அற்பணித்து வைத்தார். இந்நிகழ்வுகளின் போது கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி பகுதியில் தனது கட்சி கொடியை ஏற்றி வைத்து மக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வுகளில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் K.S.M.கருணாநிதி, ஒன்றிய பெருந்தலைவர் கோ.சத்யா கோவிந்தராஜ், ஊராட்சி தலைவர் அழகு செந்தில் ஆகியோரும் கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும், தொண்டர்களும் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.