அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டி உடல்; அடையாளம் தெரிந்தது

0 407
Stalin trichy visit

திருச்சி-திண்டுக்கல் சாலை தீரன்நகரில் தனியார் பள்ளி எதிர்புறம் உள்ள காலிமனையில் இருந்த முட்புதரில் 65 வயதுடைய மூதாட்டி அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அருகில் விஷ பாட்டில் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்த செசன்சு கோர்ட்டு போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் மேலூர் உறங்காப்பட்டியை சோ்ந்த சுந்தரி(வயது 66) என்பதும், குடும்பத்தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய அவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

Leave A Reply

Your email address will not be published.