வழிப்பறியில் ஈடுபட்ட அண்ணன் தம்பி கைது

0 529
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நபர்களிடம் நீண்ட நாட்களாக வழிப்பறி செய்த அண்ணன் தம்பியை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீபெரம்புதூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி  பரமேஸ்வரி (39). இவர் கடந்த நவம்பர் 28 ம் தேதி மாலையில் வயலுக்கு சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரிடமிருந்த 3 பவுன் நகைகளை பறித்துச் சென்றனர். இது குறித்து அவர் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று போலீசார் சிறுகனூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்து கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் புள்ளம்பாடி அருகே தெரணி பாளையம் நடுத்தெருவை சேர்ந்த சதாசிவம் மகன்கள் தர்மராஜ் மற்றும் பழனிச்சாமி அண்ணன் தம்பிகளான இவர்கள் பல்வேறு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 6 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இவர்கள் மீது மண்ணச்சநல்லூர், சிறுகனூர், புலிவலம், உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம், பாடலூர்,பெரம்பலூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இவர்கள் மீது பல்வேறுவதற்கு வழக்குகள் பதிவாகியுள்ளது இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த குற்ற சம்பவத்தில் இவர்கள் குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறை சென்றது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.