சமயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 1/2 நகை கொள்ளை
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் பிச்சாண்டார் கோவிலில் பட்ட பகலில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 4 1/2 மவுன் நகை கொள்ளை.
பிச்சாண்டார்கோயில் செல்வகணபதி நகரில் உள்ள மாருதி ஆர்கேடு பகுதியைச் சேர்ந்தவர் இனிகோ. இவரது மனைவி 42 வயதான டெய்சி ராணி. இவர் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு மேல் வீட்டை பூட்டிவிட்டு பிஷப் ஹீபர் கல்லூரிக்கு பணிக்காக சென்று விட்டார். மாலை 5:30 மணிக்கு அவரது கணவர் வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த இரண்டரை பவுன் வளையல் அரை மற்றும் முக்கால் பவுன் மோதிரம், முக்கால் பவுன் கல் தோடு என மொத்தம் 4 1/2 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இது குறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் டெய்சி ராணி புகார் கொடுத்தார். புகார் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.