காதல் மனைவியை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த கணவர் மீது வழக்கு

0 285
Stalin trichy visit

திருச்சி, சங்கிலியாண்டபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் ஜெஸ்டின்ராஜேஷ்(வயது 40). இவரது மனைவி கலையரசி(39). இவர்கள் இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். கணவன்- மனைவி இருவரும் தனியார் மருந்து கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் வீட்டில் தனது மனைவி கலையரசி யாருடனோ தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகப்பட்ட ராஜேஷ், அவரை வீட்டில் பூட்டி வைத்து உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கலையரசி கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருள்ஜோதி, கலையரசியின் கணவர் ஜஸ்டின் ராஜேஷ் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.