“தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம்” தொடக்க விழா

0 532
Stalin trichy visit

திருச்சியில் உள்ள எம்.ஏ.எம். மேலாண்மை கல்லூரியில் “தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம்” தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு மாஸ்டெர் குழுமத்தின் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பாத்திமா பத்தூல் மாலுக் தலைமை வகித்தார். எம்.ஏ.எம் மேலாண்மை பள்ளியின் இயக்குனர் எம்.ஹேமலதா வரவேற்று “வாழ்க்கையின் அமுதம் தண்ணீர்” என்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தண்ணீர் அமைப்பு தலைவர் கே.சி.நீலமேகம் வாழ்க்கைக்கு தண்ணீர் மிகவும் முதன்மையானது என்று தெரிவித்தார்.

தண்ணீர் & மாணவர் மன்ற செயலாளர் பேராசிரியர் சதீஸ்குமார் என்ன நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன, நடத்தப்பட்ட செயல்பாடுகள் என்ன மற்றும் தண்ணீரைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குங்கள் என்று கூறினார். பனானா லீப் உரிமையாளர் ஆர்.மனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து வாழ்க்கைக்கு நீரின் சாராம்சம் குறித்த ஒரு அமர்வை வழங்கினார். ஒவ்வொரு மாணவரும் தண்ணீரைப் பாதுகாப்பதில் அவர்கள் வகிக்கும் பங்கை புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.