முக்கொம்பு மேலணையை வந்தடைந்த காவிரி நீர்…
திருச்சி மாவட்ட விவசாயிகள் சாா்பாக முக்கொம்பில் காவிரி தாய்க்கு சிறப்பு பூஜைகள் செய்து விதை நெல், மலா்கள் தூவி காவிரி நீரை வரவேற்றனர்…
குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து கடந்த 24ஆம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார்…. அன்றைய தினம் 1000 கன அடியாக இருந்த காவிரி நீர். அதன் பின்னர் 5ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது. இன்று காலை நிலவரப்படி 10 ஆயிரம் கன அடி நீர் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை திருச்சி முக்கொம்பு அணைக்கு
வந்தடைந்த காவிரி நீர். தற்போது 1,500 கன அடி நீர் வரக்கூடிய நிலையில் அப்படியே தற்போது திறந்து விடப்படுகிறது.

காவிரித்தாயை வரவேற்கும் விதமாக திருச்சி மாவட்ட பல்வேறு விவசாய சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் காவிரித் தாய்க்கு மாலை அணிவித்து
காவிரி நீரில் மலர் தூவி விதை நெல்களை தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
கல்லணை தந்த கரிகாலன் சோழன் புகழ் வாழ்க என்றும் காவிரித்தாய் வாழ்க காவேரி தாயே வருக என்று கோஷம் எழுப்பி மரியாதை செலுத்தினர்.
இன்று மாலை 5 மணிக்கு கல்லணையில் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது…