இந்து முன்னணி அறிவித்திருந்த நூதன அறப்போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு

0 339
Stalin trichy visit

திருச்சி உறையூர் பிரசிதிபெற்ற பஞ்சவர்ணசுவாமி கோவில் திருத்தேர் செய்ததில் முறைகேடுகள் நடந்ததை கண்டித் து கோவில் செயல் அலுவலகம் முன்பு நாளை 08/06/2022 புதன்கிழமை அன்று காலை 10 மணிக்கு இந்து முன்னணி சார்பில் நூதன முறையில் அறப்போராட்டம் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று 07/06/2022 மதியம் கோவில் நிர்வாகம் சார்பில் இந்து முன்னணி அமைப்பினரை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள்.

அதன் பேரில் இந்து முன்னணி அமைப்பினர் அமைதி பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டு திருத்தேர் சேதாரம் அடைந்தது சம்மந்தமான பல்வேறு குற்றசாட்டுகளையும் கோரிக்கைகளையும் முன் வைத்தனர். பஞ்சவர்ணசுவாமி கோவில் நிர்வாகத்தின் உதவி ஆணையர் ஞானசேகரன்  அனைத்து குற்றசாட்டு மற்றும் கோரிக்கைகளையும் ஏற்று மிக விரைவில் இதனை சரி செய்து கொடுப்பதாக உத்தரவாதம் அளித்ததன் பேரில் இந்து முன்னணி அறிவித்திருந்த நூதன அறப்போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது .

அமைதி பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டவர்கள் :   இந்து முன்னணி சார்பில் திருச்சி மாநகர மாவட்டப் பேச்சாளர் கா.மணிகண்டன் மற்றும் கோ-அபிஷேகபுரம் மண்டல் பொதுச் செயலாளர் ச.கணேஷ் குமார் மற்றும் நெசவாளர் காலனி கிளை கமிட்டி பொறுப்பாளர்கள் சுரேஷ் , பாலாஜீ ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவில் நிர்வாகம் சார்பில் உதவி ஆணையர் சு.ஞானசேகரன் மற்றும் செயல் அலுவலர் செ.புனிதா கலந்து கொண்டனர். உறையூர் காவல்துறை சார்பில் உதவி ஆய்வாளர் மோகன்  கலந்து கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.